மாவட்ட செய்திகள்

கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் கே.என்.நேரு + "||" + All arrangements are in place to prevent water stagnation in Chennai despite heavy rains: Minister KN Nehru

கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் கே.என்.நேரு

கனமழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை மாநகராட்சி பகுதியில் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை அதிகமாக பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். எங்கும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இடங்கள் நன்றாக தெரியும். அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பு வைத்து உடனடியாக தண்ணீரை அகற்றும் பணி தயார் நிலையில் உள்ளது. கனமழை பெய்யக்கூடிய இடங்களில் தண்ணீர் தேங்காதவாறும், மக்களை பாதிக்காத வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

700 இடங்களில் பம்பு வைக்கப்பட்டு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 500 பம்புகள் உள்ளது. அடைப்புகளை அகற்ற 40 ஜெட்ராடு எந்திரங்கள் புதிதாக உள்ளது. ஏற்கனவே மழை பாதிப்பில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
2. மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-