மாவட்ட செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது + "||" + Teacher arrested for sexually harassing student

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது
சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.
சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே சேதியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 25 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிாியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அசோக்குமார்(வயது 52) நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவர் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
இதுபற்றி மாணவி, வீட்டுக்கு சென்று தனது தாயிடம் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யக்கோரி புத்தூர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரையின்படி சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அசோக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நார்த்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 முறை கத்தியால் குத்திய நபர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை 13 வினாடிகளில் எட்டு முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
4. பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின.
5. மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் அதிரடி கைது
திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.