மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு + "||" + Tasmac employees stabbed and robbed of money

டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு

டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
திருவண்ணாமலை அருகே 2 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலசபாக்கம்

திருவண்ணாமலை அருகே 2 இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கத்தியால் குத்தி பணம் பறிப்பு

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி காமராஜ் நகர் டாஸ்மார்க் கடையில் கீழ்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 43) விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். 

சம்பவத்தன்று இரவு விற்பனை முடித்துவிட்டு வீடு திரும்பினார். சிறிது தூரம் சென்றபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சரவணனை தாக்கி கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

இது சம்பந்தமாக கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

 இதே போன்று திருவண்ணாமலை அடுத்த கெங்கம்பட்டு டாஸ்மார்க் கடையில் ஆலத்தூர் அடுத்த விஸ்வநாதபுரத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போது விஸ்வநாதபுரம் அருகே மர்ம நபர்கள் வழிமறித்து அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன், டாஸ்மார்க் கடையின் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். 

இது சம்பந்தமாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழுக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.