மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி, 
பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.கட்சியின் வர்த்தக அணியின் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி அண்ணாதுரை, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கஜேந்திரன், சிவமுருகன் உள்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தலின் போது கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்ற கோரியும், குடும்ப பெண்களுக்கு ரூ.1000 கொடுக்க கோரியும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும் பா.ஜ.க.வினர் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க.வினர் சிவகாசி போக்குவரத்து பணிமனைக்கு சென்று அதிகாரியை சந்தித்து சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசு டவுன்பஸ்கள் பைபாஸ்ரோடு, காமாக்ரோடு, இரட்டைப்பாலம் வழியாக செல்ல வேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி வரும் டவுன் பஸ்களும் இதே வழிதடத்தில் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
அதேபோல சிவகாசி பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் கடந்த 1 மாதமாக திறக்கப்படவில்லை. இந்தநிலையில் சரவெடிக்குவிதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலசுப்பிரமணியம், தேவா, மகாலட்சுமி, வேம்புலுசாமி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திருத்தங் கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணி, பாண்டி, ஜோதிமணி, மாரிச்சாமி, சங்கரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை நகராட்சி ஆணையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. என்.எல்.சி.யை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்இணைப்பு, குடிநீரை துண்டித்த என்.எல்.சி.யை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.