மாவட்ட செய்திகள்

கார் மோதி பெண் படுகாயம் + "||" + injured

கார் மோதி பெண் படுகாயம்

கார் மோதி பெண் படுகாயம்
கார் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
நொய்யல், 
புன்னம்சத்திரம் அருகே பொன்னியாக்கவுண்டன் புதூர் ஆசாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புன்னம்சத்திரம் பகுதியில் தனியார் பள்ளி அருகே வந்தபோது மூலிமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த பாஸ்கரன் (39) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுந்தரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி காரை அதிவேகமாக ஓட்டி வந்த பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம்
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
2. விராலிமலையில் லாரி மீது கார் மோதியதில் வக்கீல் பலி; 3 பேர் படுகாயம் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
விராலிமலையில், சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது லாரி மீது கார் மோதியதில் வக்கீல் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
3. கிருஷ்ணராயபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 பேர் படுகாயம்
கிருஷ்ணராயபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்
மரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்து - டிரைவர் படுகாயம்
பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.