மாவட்ட செய்திகள்

திருச்செங்கோட்டில் இருந்து பண்ணாரி கோவிலுக்கு100 கிலோ மீட்டர் தூரம்நடைபயணமாக வந்த பக்தர்கள் + "||" + pannary

திருச்செங்கோட்டில் இருந்து பண்ணாரி கோவிலுக்கு100 கிலோ மீட்டர் தூரம்நடைபயணமாக வந்த பக்தர்கள்

திருச்செங்கோட்டில் இருந்து பண்ணாரி கோவிலுக்கு100 கிலோ மீட்டர் தூரம்நடைபயணமாக வந்த பக்தர்கள்
திருச்செங்கோட்டில் இருந்து பண்ணாரி கோவிலுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக பக்தர்கள் வந்தார்கள்.
 திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 100 பக்தர்கள் ஆண்டுதோறும் விரதம் இருந்து பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். அதன்படி விரதம் இருந்த பக்தர்கள் இந்த ஆண்டு நேற்று முன்தினம் மதியம் திருச்செங்கோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடத்தினார்கள்.
பின்னர் மாலை 4 மணிக்கு பக்தர்கள் சுமார் 100 பேர் செவ்வாடை அணிந்து கொண்டு கோவிலில் இருந்து நடைபயணமாக பண்ணாரியை நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் வெப்படை, பவானி, கொமாரபாளையம், கவுந்தப்பாடி வழியாக நேற்று முன்தினம் இரவு கோபிக்கு வந்தார்கள்.
அதன்பின்னர் அங்குள்ள ஒரு அம்மன் கோவிலில் தங்கிவிட்டு நேற்று அதிகாலை புறப்பட்டு சத்தியமங்கலம் வேணுகோபால சாமி கோவிலுக்கு வந்தடைந்தனர். அப்போது அவர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர் அணியினர் டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து உபசரித்தார்கள். தொடர்ந்து பக்தர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு நடைப்பயணத்தை தொடங்கினார்கள். செல்லும் வழியில் உள்ள வடவள்ளி முருகன் கோவிலில் மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு் மாலை 6 மணி அளவில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படுமா? சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கேள்வி
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
2. பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி
பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்க வசதியாக தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி பண்ணாரி சோதனைச்சாவடியில் இன்று போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
கலெக்டர் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பண்ணாரி சோதனைச் சாவடியில் இன்று (வியாழக்கிழமை) போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.