மாவட்ட செய்திகள்

திருவாரூர் கடைவீதியில் கரும்பு-மண்பாைனகள் விற்பனை + "||" + Sale of sugarcane-clay pots at Thiruvarur shopping mall

திருவாரூர் கடைவீதியில் கரும்பு-மண்பாைனகள் விற்பனை

திருவாரூர் கடைவீதியில் கரும்பு-மண்பாைனகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் கரும்பு-மண்பாைனகள் விற்பனை நடைபெற்று வருகிறது. பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைேமாதியது.
திருவாரூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் கரும்பு-மண்பாைனகள் விற்பனை நடைபெற்று வருகிறது. பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைேமாதியது. 
மக்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 
விழாவை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துகள், வாழைத்தார் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது திருவாரூர் சாலை இருபுறங்களிலும்  கரும்பு கட்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. 
பானைகள் விற்பனை
 திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் பொங்கல் அடுப்பு, மண்பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு திருவாரூர் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் மண்பாண்ட கடைகளில் ஏராளமான மண்பானைகள் மற்றும் அடுப்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், 
களிமண் பானை ரூ.60 முதல் ரூ.500 வரையிலும், அடுப்பு ரூ.90 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் பானை, அடுப்பு விற்பனை சூடுபிடித்துள்ளது என்றார்.   
இதேபோல் நீடாமங்கலத்தில் பொங்கல் மண்பானை, அடுப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.