மாவட்ட செய்திகள்

கோவையில் 981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. + "||" + Corona for 981 people in Coimbatore

கோவையில் 981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கோவையில் 981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கோவையில் 981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி நேற்று 863 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

 இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 563 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 246 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து கோவையில் இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 569 பேர் கொரேரானா தொற்றில் இரு ந்து குணமடைந்து உள்ளனர்.


கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 528 ஆக உயர்ந்தது. தற்போது 4 ஆயிரத்து 317 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாநகராட்சியில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசிக்கும் தெருக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது. மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் உலா வந்த 263 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு வழி காட்டு விதிமுறைகளை பின்பற்றாத 88 கடைகளுக்கு ரூ.42 ஆயிரத்து 100 அபராதமாக விதிக்கப்பட்டது.