மாவட்ட செய்திகள்

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Father hangs himself in despair of not marrying his son

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மகனுக்கு தி்ருமணமாக விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய கம்மியம்பட்டு நடு முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசூன் (வயது 55). இவரது மகன் ரபிக் (30). இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை. இதனால் மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என மன விரக்தியில் இருந்த பைசூன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இவரது அண்ணன் கவுஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பைசூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.