மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றவர் கைது + "||" + Man arrested for trying to kill sub-inspector

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றவர் கைது

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றவர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்றவர் கைது
கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு அருகே உள்ள மணலி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த கொல்லங்கோடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார், செல்வராஜ் வீட்டுக்கு சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த செல்வராஜ் போலீசாரை தரக்குறைவாக பேசினார். மேலும் வீட்டில் இருந்த வெட்டுகத்தியை எடுத்து வந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கழுத்தில் வெட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சுதாகரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் விலகினார். இதில் அவரது சீருடை கிழிந்தது. இதனையடுத்து உடனிருந்த போலீசார் விரைவாக செயல்பட்டு செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.