மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு + "||" + Elderly man dies in motorcycle collision

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை நடுமார்த்தால் பரதர் தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 65), தொழிலாளி.  இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  இவருடைய மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், ஞானப்பிரகாசம் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். 
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஞானப்பிரகாசம்  திட்டுவிளை சந்தை பகுதியில் இருந்து சாலையோரமாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக  வந்த மோட்டார் சைக்கிள் ஞானப்பிரகாசத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில ஞானப்பிரகாசம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.