மாவட்ட செய்திகள்

முககவசம் அணியாத 899 பேருக்கு அபராதம் + "||" + 899 fined for not wearing mask

முககவசம் அணியாத 899 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 899 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 899 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 899 பேருக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.