மாவட்ட செய்திகள்

பணியின்போது மரணமடைந்த ரேஷன்கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதி உதவி + "||" + Financial assistance to the family of a ration shop salesman who died on the job

பணியின்போது மரணமடைந்த ரேஷன்கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதி உதவி

பணியின்போது மரணமடைந்த ரேஷன்கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதி உதவி
பணியின்போது மரணமடைந்த ரேஷன்கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு நிதியை சேகரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கொமக்கம்பேடு ரேஷன்கடை விற்பனையாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். இந்த நிலையில், அவரது வருங்கால வைப்பு நிதி ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 416-க்கான காசோலையை அவரது வாரிசும், மகனுமான மதிவர்மாவிடம் தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு நிதியை சேகரின் குடும்பத்தினரிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஸ்ரீபதி, செயலாளர் பாஸ்கர், எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, தி.மு.க. நிர்வாகிகள் வி.ஜே.சீனிவாசன், எல்லாபுரம் குமார், ஜி.பாஸ்கர், டி.பாஸ்கர், நாகலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.