மாவட்ட செய்திகள்

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து + "||" + At Sivanmalai Murugan Temple Cancel Thaipusam flow

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து

சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து
சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலின் உதவி ஆணையர் ஜே.முல்லை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று வௌ்ளிக்கிழமை முதல் 18 தேதி வரை கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி  சிவன்மலை  சுப்பிரமணியசாமி கோவிலில் வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளில்  நடைபெறவிருந்த தைப்பூச உற்சவம் மற்றும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 
 தைப்பூச நாளான 18ந்தேதி உற்சவர் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலைக்கோவிலில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 19 மற்றும்  20ந்தேதிகளில்  பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.