மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + heaven door opening in perumal temple

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வீரராகவ பெருமாள் கோவில்
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, வீரராகவ பெருமாள் உற்சவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வந்து வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சாமிதரிசனம் செய்ய கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்பு கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 10 நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சொர்க்கவாசல் திறப்பு
இதுபோல் திருப்பூர் திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 4.50 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராயபுரம் கிருஷ்ணன் கோவில், குருவாயூரப்பன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜீவாகாலனியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆனந்த வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் கரிவரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது .பின்னர் காலை 5.30 மணிக்கு  ஸ்ரீதேவி பூதேவியுடன் கரிவரதராஜ பெருமாள் கருடவாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் அவினாசி, ஆட்டையம்பாளையம், வெள்ளியம்பாளையம், நம்பியம்பாளையம், காசி கவுன்டன்புதூர், கருணை பாளையம, பழங்கரைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். . பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல்கருவலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலும் சிறப்பு வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கருவலூர், காளிபாளையம், அனந்தகிரி, ராமநாதபுரம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
------------