மாவட்ட செய்திகள்

பொங்கல் திருநாளையொட்டி களை கட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை + "||" + On the occasion of Pongal Ayyalur sheep market with weeds Sale of goats and chickens for Rs 3 crore

பொங்கல் திருநாளையொட்டி களை கட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை

பொங்கல் திருநாளையொட்டி களை கட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை  ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
பொங்கல் திருநாளையொட்டி அய்யலூர் ஆட்டுச்சந்தை களை கட்டியது. இதில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானது.
வடமதுரை:
அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று அய்யலூரில் சந்தை நடைபெற்றதால் அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. 
இந்தநிலையில் கொரோனா பரவல் அச்சத்தால் சந்தைக்கு ஆடு, கோழிகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே இருந்தது. நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது சந்தையில் ரூ.3 கோடிக்கு மட்டுமே ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்தது என தெரிவித்தனர். சந்தையில் பெரும்பாலானோர் சமூக இடைவெளிைய கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.