மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா + "||" + Corona for 68 people in a single day

ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 68 பேருக்கு தொற்று

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி நகராட்சியில் 16 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 21 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி பொள்ளாச்சி பகுதியில் மட்டும் மொத்தம் 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கிருமி நாசினி தெளித்தல், காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு விதிமுறைகள்

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. இதற்கிடையில் பண்டிகை காலம் வந்ததால் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று 50-ஐ தாண்டி விட்டது. தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களை வீடுகளின் தனிமைப்படுத்தியும், சிகிக்சை தேவைப்படுவோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.