மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் புதிய முனையம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் புதிய முனையம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று மாதிரி வடிவமைப்பை வெளியிட்டு விமான நிலைய ஆணைய குழுமத்தின் பொது மேலாளர் கூறினார்.


மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

திருச்சியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு மாதத்துக்கு பின் முக்கொம்பு சுற்றுலா மையம் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்

முக்கொம்பு சுற்றுலா மையம் ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. ராட்டினம், ஊஞ்சல்களில் ஆடி சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணி தீவிரம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 5-ம் நிலைக்கு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி தொழிற்சாலை டாக்டர்-ஊழியர் வீடுகளில் 29 பவுன் நகை, பணம் திருட்டு

துப்பாக்கி தொழிற்சாலை டாக்டர் மற்றும் ஊழியர் வீடுகளில் 29 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை போலீசார் வலைவீச்சு

திருச்சி அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் லாரி மோதியதில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது

ஸ்ரீரங்கத்தில் லாரி மோதியதில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.

குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி அருங்காட்சியகம் வந்தது

குஜராத் மாநிலத்தில் இருந்து பழமையான டீசல் ரெயில் என்ஜின் திருச்சி வந்தது. இதனை திருச்சி ரெயில்வே அருங்காட்சியகத்தில் புதுப்பொலியுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

மணப்பாறையில் குடிபோதையில் காருக்கு தீ வைத்த வாலிபர் கைது

மணப்பாறையில் குடிபோதையில் காருக்கு தீ வைத்த வாலிபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் பிடித்து கைது செய்தனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/24/2018 5:49:13 PM

http://www.dailythanthi.com/Districts/Thiruchirapalli/