மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க அரசு திட்டம் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

ஒகேனக்கல்லில் செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கிறது.

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் அரூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமையில் நடந்தது.

8 வழி பசுமை சாலை பிரச்சினையில் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

8 வழி பசுமை சாலை பிரச்சினையில் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருப்போம், என்று கருத்து கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து: ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி

அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்ததில் தர்மபுரி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

எங்கள் முதுகெலும்பை உடைத்து 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? விவசாயிகள் கதறல்

எங்கள் முதுகெலும்பை உடைத்து 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? என்று கருத்து கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி.யிடம் விவசாயிகள் கதறலுடன் கேள்வி எழுப்பினார்கள்.

வருமானவரி சோதனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

நல்லம்பள்ளி அருகே குடும்பத்தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

பாப்பாரப்பட்டி அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எர்ரப்பட்டியை சேர்ந்த கஸ்தூரி (வயது 22). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

7/20/2018 2:15:23 PM

http://www.dailythanthi.com/Districts/dharmapuri