மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்

கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதிவு: மே 11, 01:51 AM

குமரியில் ஊரடங்கு அமலுக்கு வந்தது

குமரியில் 2 வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பஸ்கள், வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. பகல் 12 மணிக்கு மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கினர்.

பதிவு: மே 11, 01:47 AM

கொரோனாவுக்கு பலியான முதியவர் உடல் நள்ளிரவில் தோண்டி எடுப்பு

நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பலியான முதியவர் உடல் மாற்றி கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட உடல் நள்ளிரவில் தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதிவு: மே 11, 01:41 AM

குமரி மாவட்டத்தில் கன மழை

குமரி மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

பதிவு: மே 10, 12:59 AM

வெளிமாவட்டங்களுக்கு குறைவான பயணிகளுடன் சென்ற பஸ்கள்

குமரியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். சொந்த ஊருக்கு வருவதிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

பதிவு: மே 10, 12:56 AM

ஒரே நாளில் 892 பேருக்கு கொரோனா; 10 பேர் பலி

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்தது.

பதிவு: மே 10, 12:53 AM

கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு

நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவர் உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பதிவு: மே 10, 12:48 AM

குமரியில் கொரோனா நிவாரண நிதி 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது

குமரியில் கொரோனா நிவாரண நிதி வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் 5½ லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

பதிவு: மே 09, 01:03 AM

குமரியில் மின்னல் வேகத்தில் பரவுகிறது கொரோனா

குமரி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 819 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பதிவு: மே 09, 12:59 AM

நாகர்கோவில் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் நாகர்கோவில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பதிவு: மே 09, 12:56 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/11/2021 7:35:10 PM

http://www.dailythanthi.com/Districts/Kanyakumari