மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பலரிடம் நூதன மோசடி செய்த பெண் கைது

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து பலரிடம் நூதன முறையில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஜூலை 14, 04:00 AM

போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்: மதுவுக்கு எதிராக வேலூர் தொகுதியில் வீடு வீடாக பிரசாரம் - மதுரை வக்கீல் நந்தினி பேட்டி

‘‘நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் மதுவுக்கு எதிராக வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். எனது போராட்டத்துக்கு கணவர் உறுதுணையாக உள்ளார்’’ என்று மதுரை வக்கீல் நந்தினி கூறினார்.

பதிவு: ஜூலை 13, 05:00 AM

நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது

நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையை நீக்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பதிவு: ஜூலை 13, 04:30 AM

நேர்மையான அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும்: போலீசார் மீது பொய்யான தகவலுடன் வழக்கு தொடர்ந்தால் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீசார் மீது பொய்யான தகவலுடன் வழக்கு தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு, நேர்மையான அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தது.

பதிவு: ஜூலை 13, 04:15 AM

92 வயது தியாகிக்கு பென்சன் வழங்க மறுப்பு: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி

92 வயது தியாகிக்கு 4 வாரங்களில் பென்சன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

பதிவு: ஜூலை 13, 04:00 AM

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான், எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

“நீட்” தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான் என்றும், எதிர்ப்பு எழுந்ததால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும் மதுரையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்டேட்: ஜூலை 12, 05:09 AM
பதிவு: ஜூலை 12, 05:00 AM

மதுரை அருகே வீடு இடிந்து 4 பேர் பலி, ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் - அதிகாரியின் கையெழுத்தை போட்டு கட்டிட அனுமதி வழங்கியது அம்பலம்

மதுரை அருகே மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அதிகாரியின் கையெழுத்தை போட்டு கட்டிட அனுமதி போலியாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்டேட்: ஜூலை 12, 05:09 AM
பதிவு: ஜூலை 12, 04:15 AM

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை தூர்வாரும் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - கலெக்டர் ராஜசேகர் உறுதி

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களை தூர்வாரும் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கலெக்டர் ராஜசேகர் கூறினார்.

அப்டேட்: ஜூலை 12, 05:15 AM
பதிவு: ஜூலை 12, 04:15 AM

மதுரை ரெயில் நிலையத்தில் போலி தண்ணீர் பாட்டில்கள்? பாதுகாப்பு படை போலீசார் சோதனை

மதுரை ரெயில் நிலையத்தில் போலி தண்ணீர் பாட்டில்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்டேட்: ஜூலை 12, 05:09 AM
பதிவு: ஜூலை 12, 04:00 AM

சதுரகிரி கோவிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து, மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்வது குறித்து மதுரை, விருதுநகர் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அப்டேட்: ஜூலை 12, 04:37 AM
பதிவு: ஜூலை 12, 03:45 AM
முந்தைய மாவட்ட செய்திகள்

5

Districts

7/24/2019 2:01:10 AM

http://www.dailythanthi.com/Districts/madurai/5