மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சங்க நிர்வாகிகளுடன் சென்று கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு கொடுத்தார்.


ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வங்கி காவலாளி தவறி விழுந்து பலி

திண்டிவனத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற வங்கி காவலாளி தவறி கீழே விழுந்து பலியானார்.

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

செஞ்சி அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்ததையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

‘தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது என்று திருக்கோவிலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

என்ஜினீயரிங் மாணவியை பலாத்காரம்; வாலிபர் கைது

என்ஜினீயரிங் மாணவியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன பொறியாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 8-ம் வகுப்பு மாணவன் சாவு

செஞ்சி அருகே அரசு பள்ளியில் மூடப்படாமல் கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக கட்டிட காண்டிராக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘யாருடைய பின்புலத்தில் ரஜினிகாந்த் பேசுகிறார் என்று மக்களுக்கு தெரியும்’ கனிமொழி எம்.பி. பேட்டி

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் யாருடைய பின்புலத்தில் இருந்து கருத்துகளை தெரிவிக்கிறார் என்று மக்களுக்கு தெரியும் என விழுப்புரத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டு கடையடைப்பு

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பிரம்மதேசம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

பிரம்மதேசம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

திண்டிவனம் கல்லூரி விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டிவனத்தில் உள்ள கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

7/20/2018 1:45:04 PM

http://www.dailythanthi.com/Districts/Villupuram