பட்ஜெட் - 2020


வருமான வரி விகிதம் குறைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வருமான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். எல்.ஐ.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:12 PM
பதிவு: பிப்ரவரி 02, 05:45 AM

தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்த பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு

மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்துள்ளன எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:16 PM
பதிவு: பிப்ரவரி 02, 05:00 AM

எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை - பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி கருத்து

வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கிறது. இதில், எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:23 PM
பதிவு: பிப்ரவரி 02, 04:45 AM

மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு

மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:04 PM
பதிவு: பிப்ரவரி 02, 04:03 AM

விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நலிவடைந்த பிரிவினருக்கு இணையதள கல்வி முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:04 PM
பதிவு: பிப்ரவரி 02, 03:55 AM

மத்திய பட்ஜெட்: சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம்

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.103 லட்சம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சென்னை–பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:05 PM
பதிவு: பிப்ரவரி 02, 03:47 AM

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்: ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:10 PM
பதிவு: பிப்ரவரி 02, 03:36 AM

உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி, ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி - மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:09 PM
பதிவு: பிப்ரவரி 02, 03:28 AM

ரூ.7½ லட்சத்துக்கு மேல் செலுத்தினால் வரி விதிக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதிகளில் ரூ.7 லட்சத்துக்கு மேல் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை செலுத்தினால், அதற்கு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:23 PM
பதிவு: பிப்ரவரி 02, 01:53 AM

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்க்க அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.

அப்டேட்: பிப்ரவரி 02, 12:25 PM
பதிவு: பிப்ரவரி 02, 12:55 AM
மேலும் பட்ஜெட் - 2020

5

News

5/25/2020 1:26:57 PM

http://www.dailythanthi.com/News/Budget