பட்ஜெட்

மோடி அரசின் கனவுத் திட்டம்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ரூ.45 லட்சம் வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகை + "||" + Modi government's dream plan: By the year 2022 Home for everyone - Additional Interest Rate for Home Loans of Rs.45 Lakhs

மோடி அரசின் கனவுத் திட்டம்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ரூ.45 லட்சம் வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகை

மோடி அரசின் கனவுத் திட்டம்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ரூ.45 லட்சம் வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகை
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ரூ.45 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு என்பதுதான் மனிதராகப் பிறந்த அத்தனைபேரின் கனவாக இருக்கிறது. ஆனால் அத்தனைபேருக்கும் அது சாத்தியம் இல்லை. குறிப்பாக கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தினர், அடிமட்டத்தினருக்கு சொந்த வீடு என்பது நிறைவேறாமல் போய் விடுகிறது.


இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டத்தை மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு நிறைவேற்ற உள்ளது. இதை பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் நோக்கம், 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவது ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடியே 54 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டமாக 2019-20-ல் இருந்து 2021-22 வரையில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 1 கோடியே 95 லட்சம் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் கழிவறை, மின்சாரம், சமையல் கியாஸ் இணைப்பு போன்ற வசதிகள் வழங்கப்படும்.

தொழில் நுட்பத்தின் பயன்பாடு, நேரடி பயன்பாடு மாற்றம் ஆகியவற்றின் காரணமாக ஒரு வீடு கட்டி முடிப்பதற்கான கால கட்டம் 2015-16-ம் ஆண்டில் 314 என்று இருந்தது, 2017-28-ல் 114 நாட்களாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் வீடு, மலிவு விலை வீடு என்ற நோக்கத்தை அடைவதற்காக வட்டி சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை ரூ.45 லட்சம் வரையில் வாங்கிய வீட்டு கடன்களுக்கு வட்டியில் ரூ.2 லட்சம் சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.1½ லட்சம் வட்டியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வீட்டுக்கடன் வட்டிச்சலுகை ரூ.3½ லட்சமாக உயர்கிறது. அதே நேரத்தில் 15 ஆண்டுகளில் திரும்ப செலுத்தத்தக்க வீட்டு கடன்களில் இந்த வட்டிச்சலுகை ரூ.7 லட்சமாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மோடி-ஜின்பிங் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நேற்று 2-வது நாளாக சிறப்புற நடந்தேறியது.
2. காஷ்மீர்: போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்க முடிவு எனத் தகவல்
காஷ்மீரில் போஸ்ட் பெய்டு மொபைல் சேவையை நாளை மறுநாள் முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
3. சென்னை கிண்டியில் இருந்து கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
மோடியை 2-வது நாளாக சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் கோவளத்திற்கு தனது பிரத்யேக காரில் புறப்பட்டுச் சென்றார்.
4. மோடி வருகை: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளதையடுத்து அவரது வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
5. பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.