பட்ஜெட்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் + "||" + Nirmala Sitharaman, 6th Finance Minister from Tamil Nadu filed the Union Budget

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.
புதுடெல்லி,

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் மற்றும ப. சிதம்பரம் ஆவார்கள்.


இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார். இவர் நேற்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இவருக்கு மற்றொரு சிறப்பும் சேர்கிறது. அது பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண் நிதி மந்திரி என்ற சிறப்பு ஆகும்.

இதற்கு முன்பு இந்திரா காந்தி நாட்டின் முதல் பெண் நிதி மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவர் 1970-ம் ஆண்டு 1970-71 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இப்போது நிர்மலா சீதாராமன் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை மிக நீண்டதாகும். அவர் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. இரு மாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது.
4. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக 13 இடங்களில் முன்னிலை, அதிமுக 9 இடங்களில் முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.