பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கீடு + "||" + Rs 65,837 crore allocated for Railways in Central Budget

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளவை பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

ரெயில்வே துறையின் மூலதன செலவு ரூ.1.60 லட்சம் கோடி என்பதில், இந்த பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கப்படுகிறது. (கடந்த ஆண்டு மூலதன செலவு ரூ.1.48 லட்சம் கோடியில், ரெயில்வேக்கு ரூ.55,088 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)


இதில் புதிய இருப்பு பாதைகள் அமைக்க ரூ.7,255 கோடி ஒதுக்கப்படுகிறது. மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்ற ரூ.2,200 கோடியும், இரட்டைப்பாதை பணிக்கு ரூ.700 கோடியும், புதிய ரெயில்கள் மற்றும் பராமரிப்புக்கு ரு.6,114.82 கோடியும், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு வசதிகளுக்கு ரூ.1,750 கோடியும் ஒதுக்கப்படுகிறது. (இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அளவே தொடருகிறது)

ரெயில்வே உள்கட்டமைப்புக்கு 2018-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. எனவே ரெயில்வே திட்டங்களின் இணைப்பு வசதியை ஊக்கப்படுத்தவும், வேகமான வளர்ச்சிக்கும், பயணிகள் கட்டண சேவைகளை வழங்கவும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் ரெயில் போக்குவரத்தில் சிறப்பு ரெயில்கள், மெட்ரோ ரெயில் திட்டங்கள் ஆகியவற்றில் தனியார் பங்களிப்பு இடம்பெற ஊக்குவிக்கப்படுகிறது. ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகளும் இந்த ஆண்டில் தொடங்கும். ஒப்படைக்கப்பட்டுள்ள சரக்கு ரெயில் போக்குவரத்து பாதை திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் சில பயணிகள் ரெயில் போக்குவரத்து தடையின்றி நடைபெறும்.

சரக்கு போக்குவரத்துக்கு ஆறுகளை பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தில் உள்ள நெரிசல் குறையும்.

ரெயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு ரூ.3,422.57 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ரெயில் பயணிகளின் வசதிகளுக்காக கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

ரெயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த ஆண்டு ரூ.86,554.31 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.14 ஆயிரம் கோடி அதிகம்.

நிர்பயா நிதியாக ரூ.267.64 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.250 கோடி செலவிடப்படும். எஞ்சிய ரூ.17.64 கோடி கொங்கன் ரெயில்வே கார்பரே‌ஷனுக்கு ஒதுக்கப்படுகிறது.

2019-20-ம் ஆண்டில் மொத்த ரெயில்வே போக்குவரத்து வருமானம் ரூ.2,26,675 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட இது ரூ.19,961 கோடி அதிகம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. லக்னோ ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பு; பயணிகள் வருத்தம்
லக்னோ ரெயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ‘மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ - பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
3. மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை - வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.5 ஆயிரம் கூடுதலாக எடுக்கலாம்
விவேகானந்தர் கருத்தை நினைவு கூர்ந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை அறிவித்தார். இதன்மூலம் வங்கி கணக்கில் இருப்பதை விட அவர்கள் கூடுதலாக ரூ.5 ஆயிரம் ரொக்கமாக எடுக்கலாம்.
4. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் - மு.க.ஸ்டாலின் கருத்து
மத்திய பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இனிப்பையும் வழங்கியுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5. மத்திய பட்ஜெட் 2019: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் 10 சதவீதமாக இருந்த சுங்கவரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.