ரூ.7½ லட்சத்துக்கு மேல் செலுத்தினால் வரி விதிக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு


ரூ.7½ லட்சத்துக்கு மேல் செலுத்தினால் வரி விதிக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 8:23 PM GMT (Updated: 2 Feb 2020 6:53 AM GMT)

வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நிதிகளில் ரூ.7 லட்சத்துக்கு மேல் நிறுவனங்கள் பங்களிப்பு தொகை செலுத்தினால், அதற்கு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய ஓய்வூதிய நிதி, வயது முதிர்வு ஓய்வு நிதி, வருங்கால வைப்புநிதி போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் பணியாளர்களும், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பு தொகையை செலுத்தி வருகின்றனர்.

இந்த 3 நிதிகளிலும் சேர்த்து ஒரு பணியாளருக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை ஆண்டுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரமாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகைக்கு மேல், பணியாளருக்கு நிறுவனங்கள் செலுத்தினால், அது கூடுதல் வருமானமாக கருதப்படும். அந்த கூடுதல் தொகைக்கு வரி விதிக்கப்படும்.

2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும். 2021-2022 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டுக்கு இது பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story