சினிமா செய்திகள்

வெளியான 3 வாரங்களில் ரூ.1500 கோடி வசூலை தாண்டி பாகுபலி -2 சாதனை + "||" + Baahubali 2 21-day box office collection: SS Rajamouli's film crosses Rs 1,500 crore mark in 3 weeks

வெளியான 3 வாரங்களில் ரூ.1500 கோடி வசூலை தாண்டி பாகுபலி -2 சாதனை

வெளியான 3 வாரங்களில் ரூ.1500 கோடி வசூலை தாண்டி பாகுபலி -2 சாதனை
வெளியான 3 வாரங்களில் ராஜமவுலியின் பாகுபலி-2 ரூ.1500 கோடி வசூலை தாண்டி சாதனை புரிந்து உள்ளது.


சென்னை,

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது. 6 நாட்களில் ரூ.750 கோடி வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தியது.

இப்போது கடந்த 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம்  வெளியான 21 நாட்களில் ரூ. 1502 கோடி வசூல் செய்து சாதனையை நிகழ்த்தி உள்ளது.இந்தியாவை தவிர உலக அளவில் 3 வாரங்களில் பாகுபலி-2  ரூ.252 கோடி வசூல் செய்து உள்ளது.

இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலில் இரட்டிபாக ஈட்டி உள்ளது பாகுபலி-2 . உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி-2 படத்தை சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜப்பானில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது, மேலும் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.150 கோடி வசூலை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்பட குழுவிற்கு ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.