பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்கொலை முயற்சி நடிகை ஓவியாவுக்கு ‘சம்மன்’
x
தினத்தந்தி 12 Aug 2017 6:43 AM GMT (Updated: 12 Aug 2017 6:43 AM GMT)

நடிகை ஓவியா தற்கொலை முயற்சி தொடர்பான விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை

தனியார் தொலைக்காட்சி யில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கு கிறார்.

இதில் எப்போதும் கல கலப்புடனும், சுறுசுறுப்பட னும் இருந்த நடிகை ஓவியா திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி யில் சக பங்கேற்பாளரான ‘ஆரவ்’ உடன் காதல் வயப்பட்டு அது தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு மாறிய தாக ஓவியா தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஒருநாள் மழையில் திறந்த வெளியில் தூங்கினார். இதை ஆரவ் கண்டு பிடித்து அவரை மீட்டு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா குதித்தார். அப்போதும் அவரை ஆரவ் காப்பாற்றினார். ஓவியாவின் இந்த செயலால் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று விட்டார். அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித வெளிதொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே அவர்கள் வெளியே வர முடியும். கடந்த 4-ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காட்சி இடம் பெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தங்களின் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கவே தயாரிப் பாளர்கள் தூண்டுதலின் பேரில் மற்றவர்கள் நடிகை ஓவியாவை இந்த நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர். எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்  என்று கூறியுள் ளார்.

நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனுக்கு ஏற்கனவே இதுபற்றி புகார் வந்தது. அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தி திரும்பினார்.

தற்போது சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் அதனை பதிவு செய்து கொண்டார். விசாரணை நடத்துவதற்காக நடிகை ஓவியாவுக்கு நேரில் ஆஜராகு மாறு சம்மன் அனுப்பியுள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக நடிகை ஓவியாவின் உதவியாளருடன் அவர் தொடர்பு கொண்டு பேசினார். உதவியாளர் கூறும்போது, “ஓவியா தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை” என்று மறுத்ததாகவும் இன்ஸ் பெக்டர் தெரிவித்தார்.

Next Story