இனி நான் எந்த படத்திற்கும் 5 ஆண்டுகள் ஒதுக்க மாட்டேன், என் கேரியரை பாதிக்கும் -பாகுபலி ஹீரோ


இனி நான் எந்த படத்திற்கும் 5 ஆண்டுகள் ஒதுக்க மாட்டேன், என் கேரியரை பாதிக்கும் -பாகுபலி ஹீரோ
x
தினத்தந்தி 4 Jan 2018 5:51 AM GMT (Updated: 2018-01-04T11:20:56+05:30)

இனி நான் எந்த படத்திற்கும் 5 ஆண்டுகள் ஒதுக்க மாட்டேன் அது என் கேரியரை பாதிக்கும் என பாகுபலி ஹீரோ பிரபாஸ் கூறினார். #Baahubali #Prabhas

ஹைதராபாத்

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க 5 ஆண்டுகளை ஒதுக்கினார் பிரபாஸ். அந்த 5 ஆண்டுகளில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

இது குறித்து நடிகர் பிரபாஸ் கூறியிருப்பதாவது:-

பாகுபலி போன்று இனி எந்த படத்திற்காகவும் இத்தனை ஆண்டுகளை நான் ஒதுக்குவேன் என்று தோன்றவில்லை. இனி இது போன்ற ரிஸ்க் எடுத்தால் அது என் கேரியரை பாதிக்கும்.

நடிகர்களுக்கு குறிப்பிட்ட காலம் தான் மார்க்கெட் இருக்கும். இனி நான் எந்த படத்திற்கும் 5 ஆண்டுகள் ஒதுக்க முடியாது. அப்படியே ஒதுக்கினாலும் அதோடு சேர்த்து வேறு படங்களிலும் நடிப்பேன். வயதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது

பாகுபலி போன்ற பட வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும். அதற்கு கூடுதல் அர்ப்பணிப்பு தேவைப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்கிறேன்.

பாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. இந்தி மட்டும் அல்ல பஞ்சாபி உள்பட எந்த மொழி படங்களிலும் நடிக்க நான் ரெடி. ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன். மொழி எனக்கு முக்கியம் அல்ல என கூறினார். 

#Baahubali / #Prabhas / #Cinemanews

Next Story