அரசியல் பிரவேசம்: ரஜினிகாந்துக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து


அரசியல் பிரவேசம்: ரஜினிகாந்துக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
x
தினத்தந்தி 4 Jan 2018 8:12 PM GMT (Updated: 2018-01-05T01:42:02+05:30)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வருகிறார்களே?

பதில்:- ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைமை வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் முடிவு எடுத்து இருக்கலாம்.

கேள்வி:- ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் எடுபடும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- ரஜினிகாந்த் பேசியதை யூடியூப்பில் நான் பார்த்தேன். மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் என்று தான் சொல்லி இருக்கிறார். எந்த அர்த்ததில் சொன்னார் என்பது அவருக்கு தான் தெரியும். நல்ல அர்த்ததில் தான் அவர் சொல்லி இருப்பார் என்று நான் நம்புகிறேன். 25 ஆண்டுகள் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா?

பதில்:- அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. யோசித்து சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story