சினிமா செய்திகள்

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை சுத்தபடுத்தி அவமானபடுத்திய பாரதீய ஜனதா + "||" + BJP Yuva Morcha shocker: Cow urine sprinkled to purify venue after Prakash Raj speech

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை சுத்தபடுத்தி அவமானபடுத்திய பாரதீய ஜனதா

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை சுத்தபடுத்தி அவமானபடுத்திய  பாரதீய ஜனதா
நடிகர் பிரகாஷ் ராஜ் பேசிவிட்டு சென்ற மேடையைச் சுத்தபடுத்தி அருவருக்கத்தக்க செயல் செய்த பாரதீய ஜனதா #Prakashraaj

பெங்களூர்

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் மூலம்  அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீயஜனதாவை விமர்சித்து வருகிறார்

இந்த நிலையில்  கர்நாடகாவில், சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ் உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து பேசினார். இது பாஜக இளைஞர் அணியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பாஜக இளைஞர் அமைப்பினர், நிகழ்ச்சி முடிந்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்தனர்

இதுகுறித்து பேசிய பாஜக இளைஞர் அணித் தலைவர் விஷால் மராதே தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர் எங்கள் வழிபாட்டு தலங்களை அசுத்தம் செய்கின்றனர். இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்; இத்தகைய சமூக விரோதிகளை சமுதாயம் மன்னிக்காது என்று கூறினார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ் நீங்கள்  தொடர்ந்து இத துப்புரவில் ஈடுபடவேண்டும்.  நான் எப்போதும் எங்கே சுத்திகரிப்பு சேவை செய்கிறேன். நான் சுத்திகரிப்பு சேவைக்காக நான் எங்கும் செல்வேன் என கூறி  உள்ளார்.

 #Prakashraaj  #BJP   #justasking  #YuvaMorcha

BJP workers cleaning and purifying the stage ..from where I spoke in Sirsi town ...by sprinkling cow urine (divine gomoothra)...🤭🤭🤭...will you continue this cleaning and purification service where ever I go..... #justaskingpic.twitter.com/zG1hKF8P4r