எப்போது தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன் - நடிகர் ரஜினிகாந்த்


எப்போது தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன் - நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:22 AM GMT (Updated: 2018-01-17T16:52:51+05:30)

புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். #Rajinikanth

சென்னை

-
தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாக பதி விட்டு வந்த கமல் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில் எம் மக்களை நேரில் சந்திக்கும் அரசியல் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து பிப்ரவரி 21-ந் தேதி தொடங்க இருக்கிறேன். அன்று கட்சி பெயரை அறிவிக்கிறேன். என கூறி உள்ளார்.

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது ரசிகர்கள், பொது மக்களை சந்திக்கும் கமல் பொதுக்கூட்டங்களிலும் பேச    திட்டமிட்டுள்ளார். தான் தங்கும் ஓட்டல்களில் ரசிகர்களை  முதலில் சந்திக்கும் அவர் பின்னர் பொதுமக்களை நேரில் சென்று சந்திக்க உள்ளார். 

சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்க வும் ரசிகர்களுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுப்பயணத்தின்போது, அந்த பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்த் நிலையில் இன்று போயஸ் தோட்டத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த்  புதிய கட்சி தொடங்கப்போவதாக  அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இனைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும் . 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன் என கூறினார்.

#TnPolitics #Rajinikanth #KamalHaasan #KamalhaasanPoliticalEntry #RajinikanthpoliticalentryNext Story