பத்ம விபூஷண் விருது: தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் - இளையராஜா பேட்டி


பத்ம விபூஷண் விருது: தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் - இளையராஜா பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2018 3:19 PM GMT (Updated: 2018-01-25T20:49:05+05:30)

பத்ம விபூஷண் விருது பெற்றது தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார். #68thRepublicDay #Ilayaraja

சென்னை,

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட உள்ளது. 

இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story