திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் -ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்


திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் -ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 March 2018 6:23 AM GMT (Updated: 24 March 2018 6:23 AM GMT)

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - நிர்வாகிகள் சுதாகர் -ராஜூ மகாலிங்கம் அறிவுறுத்தல் #RajiniMakkalMandram

சென்னை,

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்வதில் செயலாளர் ராஜு மகாலிங்கமும், நிர்வாகி வி.எம்.சுதாகரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 27–ந்தேதி சென்னையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியானது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம் என நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளான மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் என 147 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ரஜினியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரஜினிமக்கள் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு  உள்ளது. திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என  நிர்வாகிகள் சுதாகர் -ராஜூ மகாலிங்கம் அறிவுறுத்தி உள்ளனர்.  பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்துக்காக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்படக்கூடாது.  ரஜினி மக்கள் மன்றத்தில்  ஒரு போது இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. ரஜினி மக்கள் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது  விரோத செயல். 

Next Story