சினிமா செய்திகள்

துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த் + "||" + Firing I condemn the police brutality Rajinikanth

துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்

துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வீடியோ மூலம் பேசி உள்ள நடிகர் ரஜினிகாந்த் 

காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன். துப்பாக்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை தமிழக அரசின் தோல்வியைக் காட்டுகிறது.என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலெக்டர் சந்தீப் நந்தூரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜரானார். #SandeepNanduri #ThoothukudiShooting