சினிமா செய்திகள்

துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ் + "||" + Firing:The absence of spine, Tamil Nadu should be ashamed Prakash Raj

துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்

துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு.  தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முதுகெலும்பு இல்லாத அரசு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாக கூறி உள்ளார். #ThoothukudiShooting #sterlitekillsthoothukudi
சென்னை

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்  சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா ? மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது - போலீஸ்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
3. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சமூக சேவகி மேதா பட்கர் ஆறுதல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சமூக சேவகி மேதாபட்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
4. சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சாட்சி சொல்ல வருபவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
5. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை அமர்த்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.