பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார்


பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார்
x
தினத்தந்தி 1 Jan 2019 12:05 PM IST (Updated: 1 Jan 2019 12:34 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் காலமானார். இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடைபெறும்.

புதுடெல்லி,

அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் 300க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் .

ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் காதர்கான்.  காதர்கான் 1973-ல் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) படத்தில் அறிமுகமானார். இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு  திரைக்கதை வசனம் எழுதி உள்ளார்.  81 வயதான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 16 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் உயிரிழந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில் அதனை அவரது மகன் சர்பராஸ்கான் மறுத்திருந்தார். இந்நிலையில் காதர்கான் கனடா நேரப்படி டிசம்பர் 31-ஆம் தேதி உயிரிழந்ததாக சர்பராஸ்கான் தெரிவித்துள்ளார். என் அப்பா எங்களை விட்டு சென்று விட்டார். அவர் டிசம்பர் 31 அன்று காலை 6 மணியளவில் காலமானார். அவர் பிற்பகல் கோமாவிற்கு சென்றார். அவர் 16 வாரங்களாக மருத்துவமனையில் இருந்தார்.

"காதர்கானின் இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடைபெறும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இங்கே இருக்கிறோம். நாங்கள் இங்கே  வாழ்கிறோம், அதனால் நாங்கள் அதை செய்கிறோம் " என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story