சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் - போலீஸ் அனுமதி கேட்டு பாடகி சின்மயி மனு


சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் - போலீஸ் அனுமதி கேட்டு பாடகி சின்மயி மனு
x
தினத்தந்தி 8 May 2019 3:55 PM IST (Updated: 9 May 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, போலீஸ் அனுமதி கேட்டு பாடகி சின்மயி மனு அளித்துள்ளார். #Chinmayi #RanjanGogoi

சென்னை,

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார் பற்றி முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும், அதற்கு உரிய அனுமதி வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பாடகி சின்மயியை சந்தித்து விவரம் கேட்க பத்திரிகை நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால், பத்திரிகை நிருபர்களை சந்திக்காமல் பாடகி சின்மயி கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கூறப்பட்ட பாலியல் புகார் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story