கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் -நடிகை அமலாபால்


கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் -நடிகை அமலாபால்
x
தினத்தந்தி 24 July 2019 7:23 AM GMT (Updated: 2019-07-24T12:53:03+05:30)

கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நடிகை அமலாபால் பேசினார்.

சென்னை

நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை பட காட்சி பரபரப்பானது.  இப்படத்தை தடை செய்யக்கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார்  அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் படம் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்து கொண்டு பேசிய நடிகை அமலாபால்  கூறியதாவது;-

மண், மொழி, மக்கள் இவற்றிலிருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன். ஆடை திரைப்படம் மனிதாபிமானம் குறித்து பேசியது. ஆடை திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

Next Story