பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து


பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Sep 2019 4:16 PM GMT (Updated: 2019-09-24T21:46:59+05:30)

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சென்னை,

திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது எனவும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ஏற்கனவே பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இந்த விருதை பெற்றுள்ளது நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய  தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story