அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி


அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு  நடிகர் தனுஷ் நன்றி
x
தினத்தந்தி 17 Oct 2019 6:02 AM GMT (Updated: 17 Oct 2019 6:02 AM GMT)

அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.

சென்னை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை ஒட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் பார்த்து ரசித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 


மு.க. ஸ்டாலின் பாராட்டுக்கு நடிகர் தனுஷ் காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம் என நன்றி தெரிவித்து உள்ளார்.

Next Story