நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து


நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 7 Nov 2019 6:56 AM GMT (Updated: 7 Nov 2019 6:56 AM GMT)

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோர் டுவிட்டர் வழியே தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வழியே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story