ஆபாசமாக பதிவிடுவதாக வாலிபர் மீது பிரபல மாடல் அழகி புகார்


ஆபாசமாக பதிவிடுவதாக வாலிபர் மீது பிரபல மாடல் அழகி புகார்
x
தினத்தந்தி 16 Jan 2020 7:39 AM GMT (Updated: 2020-01-16T13:40:18+05:30)

ஃபிளின் ரெமெடியோஸ் என்பவர் ஆபாசமாக பதிவிடுவதாக பிரபல மாடல் அழகி புகார் அளித்து உள்ளார்.

புதுடெல்லி: 

முன்னாள் மிஸ் இந்தியாவும் மாடல் அழகியுமான நடாஷா சூரி சிங், ஃபிளின் ரெமெடியோஸ் என்ற நபர் மீது புகார் அளித்து உள்ளார். நடாஷா தனது வழக்கறிஞர் மாதவ் வி.தோரத்துடன் சென்று மும்பை தாதர் காவல் நிலையத்தில் ரெமிடியோசுக்கு எதிராக  புகார் அளித்து உள்ளார்.

இதுபோல் டிசம்பர் 24 ஆம் தேதி பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள சைபர் குற்ற புலனாய்வு பிரிவில் (சி.சி.ஐ.சி) புகார் அளிக்கப்பட்டது, ஆனால் புதன்கிழமை தாதர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

தனது புகாரில் நடாஷா, ரெமிடியோஸ் ஆபாச தகவல்களை வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததாக கூறி உள்ளார்.

இது குறித்து நடாஷா சூரி சிங் கூறியதாவது:-

இந்த தொல்லை 2019 நவம்பரில் தொடங்கியது. யாரோ போலி செய்தி கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கி என்னைக் குறி வைக்க தொடங்கினர், மேலும் ஒரு குளியலறையில்  முகம் மங்கலாக தெரியும் சிறுமிகளின் ஆட்சேபனைக்குரிய படங்களை வெளியிட்டு அதில்  நடாஷா சூரி சிங் என்ற பெயரை குறித்து வைத்தனர். ஃபிளின் ரெமிடியோஸ் இதைச் செய்து கொண்டிருந்தார். அவர் ஆபாச வலைதளங்களிலிருந்து படங்களை எடுத்து அவற்றில் எனது தலைகளை சேர்த்து எனது பெயரிட்டு உள்ளார் என கூறினார்.

நடாஷா சூரி 2006-ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார் மற்றும் உலக அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். மலையாளத் திரைப்படமான "கிங் லையர்" மூலம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் பாபா பிளாக் ஷிப் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்து உள்ளார். "இன்சைட் எட்ஜ்" உள்ளிட்ட சில  தொடர்களில் நடித்து வருகிறார்.

Next Story