டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி ; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி ; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
x
தினத்தந்தி 16 Jan 2020 10:28 AM GMT (Updated: 2020-01-16T16:32:47+05:30)

டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை

தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

ஜெயஸ்ரீ, தனது கணவர் ஈஸ்வர் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார். ஜெயஸ்ரீ - ஈஸ்வர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறினர்.
 
ஜெயஸ்ரீயின் இந்த மெசேஜைப் பார்த்த அவரது தோழி, ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது நடிகை ஜெயஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story