ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கை: மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் -நடிகை சோனம் கபூர்


ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கை: மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் -நடிகை சோனம் கபூர்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:31 AM GMT (Updated: 2020-01-16T17:01:43+05:30)

ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டேன் என்று நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் உள்ள அவர், வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில். லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது ஓட்டுநர் நிதானமிழந்த நிலையில் கூச்சலிட்டவாறு வாகனத்தை ஓட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கைகளால் தான் கலங்கிப்போய்விட்டதாகக் கூறியுள்ள அவர், லண்டனில் பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறு தனது நண்பர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், டுவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ள உபேர் நிறுவனம் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Next Story