பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் -வைரமுத்து


பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் -வைரமுத்து
x
தினத்தந்தி 16 Jan 2020 12:29 PM GMT (Updated: 2020-01-16T17:59:45+05:30)

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை முற்றாக ஒழிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவள்ளுவரை வாழ்த்தி திருக்குறள் பாடப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய  வைரமுத்து,

மது உடலுக்கு மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் கேடு விளைவிக்கிறது. மது விற்பனை மூலம் விபத்து, 30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது. இது தான் தமிழகத்திற்கு விஷம் என்று குறிப்பிட்டார்.

இந்தாண்டின் தேவை மதுவிலக்குதான் எனவும் தமிழ்நாட்டை மாசுபடுத்தும் நஞ்சு என்று மதுவை சொல்ல வேண்டியுள்ளது என கூறினார்.

Next Story