நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயம்


நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 1:04 PM GMT (Updated: 18 Jan 2020 1:04 PM GMT)

இந்தி திரைப்பட மூத்த நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் இன்று காயமடைந்து உள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி (வயது 69).  இவர் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை அடுத்து சபானா ஆஸ்மி மீட்கப்பட்டு உடனடியாக நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சபனா ஆஸ்மியுடன் அவரது கணவர் ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார்.  எனினும் விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.

நடிகை சபானா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். இது தவிர்த்து, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, சர்வதேச விருதுகள் மற்றும் பிற விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.

Next Story