தனுசுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய்


தனுசுடன் இணைந்து  நடிக்கும் புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய்
x
தினத்தந்தி 22 Jan 2020 12:08 PM GMT (Updated: 2020-01-22T17:38:57+05:30)

தனுசுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக நடிகர் அக்ஷய்குமார் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை

பாலிவுட்டில் தனு வெட்ஸ் மனு மற்றும் ஜீரோ புகழ் படத்தை இயக்கிய  ஆனந்த் எல் ராய்  ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். படத்தில்  சாரா அலிகான் மற்றும் தனுஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டை பொருத்தவரை அக்ஷய்குமார் பெரும்பாலான படங்கள் தொடர்ச்சியாக கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் அவரது சம்பளமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆனந்த் எல் ராய் அடுத்து இயக்கவுள்ள இந்தப் படத்தில்,  அக்ஷய்குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 4ஆம் இடம் பிடித்த அக்ஷய்குமார் , பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக உருவெடுத்துள்ளார்.

அக்‌ஷய் குமாருக்கு  இந்த ஆண்டில் வெளிவருவதற்கு 3 படங்கள் உள்ளன. .ரோஹித் ஷெட்டியின்  சூரியவன்ஷி. பிருத்விராஜ் வரலாற்று படம்.  லக்ஷ்மி பாம். இதில் அவர் முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கிறார்.

Next Story