குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்


குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 5 Feb 2020 5:41 AM GMT (Updated: 5 Feb 2020 5:41 AM GMT)

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை

போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு சம்மன் வரவில்லை. என்பிஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) நாட்டுக்கு  அவசியம் முக்கியமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

சிஏஏ சட்டத்தால் ( குடியுரிமை திருத்த சட்டம்) இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியா பிரிவினையின் போது எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படி வந்தால் நான் முதலாவதாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவாகாரத்தில் பீதி கிளப்பட்டு உள்ளது.  அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள்.

என்ஆர்சி இன்னும் அமல்படுத்த வில்லை ஆலோசித்து வருவதாகத் தான் கூறுகின்றனர்.

நான் நேர்மையாக தொழில் செய்கிறேன்.நான் நேர்மையாக வருமான வரி செலுத்துபவன். சட்டவிரோத தொழில் செய்யவில்லை.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்:

மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது பின்னர் அவர்களுக்குத் தான் பிரச்சினை என கூறினார்.

Next Story